பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 55

எல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம். --

ஆதியில் தோன்றியது சூரியனே என்பதாக:

விவிலியம் பேசுகிறது.

பூமி உருவமற்று வெறுமையாயிருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. கடவுளின் ஆவி தண்ணிர் மேல், அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் உண்டாகுக என்று கடவுள் சொன்னார். வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சத்தையும் இருளையும் கடவுள் வெவ்வேறாகப் பிரித்தார். வெளிச்சத்துக் குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட் டார். (பைபிள்: ஆதியாகமம் வசனம் 2-5 வரை)

பகல் என்பதற்கு சூரியன் என்று பொருள்.

பகல் செய்வதால், அதற்கு பகலவன் என்றும் பெயர்.

பகலோன் என்றாலும் சூரியன் என்றே பொருள்.

இருளையும் பகலையும் பிரித்ததால் தான் அதற்குப் பகவன் என்று பெயரிட்டனர்.

இந்த, சூரியன் பிறப்பு பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

‘முதலில் இருளான அண்டம் உண்டாயிற்று. அதன் மத்தியிலிருந்த பிரமன், அதைப் பிளந்தான். அக்காலத்தில் ஒம் என்னும் ஒலி உண்டாயிற்று. அந்த ஒங் காரத்தால் , சூரியனுக்கு சூட் சம உருவம்