உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 6I

இருளைப் போக்கி, நடமாடவும் நல்வாழ்வு வாழவும் வைக்கிறது.

இதனால் தான், ஆதி பகவன் என்பது, முதன்மையான சூரியன் என்றும், எல்லாவற்றிற்கும் மூலமான ஆதவன் என்றும் இங்கே பொருளுரைத் திருக்கிறோம்.

கைக் கெட் டாத துரத்தில் இருந்தாலும் , கண்ணுக் கெதிரே வந்து காட்சியளிக்கிற கடவுளாக சூரியன் விளங்குகிறது.

ஆதிகால கிரேக்கர்கள், மற்றும் ரோமானியர்கள் மற்றும் அகிலத்தார் எல்லாமே, சூரியனின் சக்தியை வியந்து போற்றி, தெய்வமாக மனதில் ஏற்று, சூரியக் கடவுளாக வைத்துக் கொண்டாடி வாழ்ந்தனர் என்பது வரலாறு.

பண்டைக் காலத்தில், பாரத தேசத் தில் பல மதங்கள் இருந்தன. சூரிய வாதி, சந்திரவாதி, நவக் கிரகவாதி, பஞ்ச கோச வாதி, வாழ் வாதி, காலவாதி, மந்திரவாதி, யந்திரவாதி, அவ் விதவாதி எனப் பல மதத்தவர்கள் எல்லோரும் இருந்தார்கள். இம் மதத்தவர்கள் சூரிய சந்திராதிகளையே தெய்வமாகக் கொண்டார்கள். தற்காலத்தில் இந்த மதங்கள் இல்லை. (அபிதான சிந்தாமணி பக்கம் 1248)

ஆக, சூரிய வணக்கம் என்பது மக்களுக்குப் புதிதல்ல.

‘தினைத்துணை நன்றி செயினும் பனைந்துணை யாக்

கொள்வர் பயன் தெரிவார்’ (104)

என்று வள்ளுவர் பாடியிருக்கிறாரே!