உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

62

அதனால் தான், மத உணர்வில் முகிழ்த்துப் போயிருந்த மக்களைத் தன் பக்கம் திருப்பும் பொருட்டு, கடவுள் வாழ்த்து என்ற தலைப்பிட்டுத் தந்து, தான் சொல்லப் போகின்ற நல்ல பல செய்தி களுக்கு, வழிகாட்டுதல் களுக்கு, தன் நூலை பயில வைக் கும் நுண் மாண் நுழை புலத்துடன், ஆதிபகவனை ஆர்ப்பாட்டத்துடன், போற்றி வணக்கம் செய்கிறார்.

சூரியனைக் கதிரவன் என் பார்கள். கதிரவன் என்பதற்கு கடவுள் என்ற பொருளும் உண்டு.

கடவுள் வாழ்த்து என்ற பகுதியில், ஒரு தடவை கூட கடவுள் என்ற சொல்லை, வள்ளுவர் பயன்படுத்தவேயில்லை.

கடவுள் வாழ்த்து என்ற தலைப் பைத் தந்து விட் டு, சூரியனைக் கூறி, சூரியனைப் புகழ்ந்து, சூரியனைச் சுற்றியே a- வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று பாடுகிறார்.

உலக மக்கள், சூரியனைப் போல, ஒருவருக் கொருவர் உதவிக் கொண்டு உறுதுணையுடன் வாழ வேண்டும். அதற் குரிய பரந்த மனப் பாங் கை, பண்பாட்டைப் பெற, வழிகாட்டுகின்ற மோன குரு வினைத் தெரிந்து, ஞான வழியில் நடக்க வேண்டும் என்பதற்காகவே முதல் குறளில் சூரிய வணக்கம் செய்திருக்கிறார். - -

சூரிய தேவன் என்றும் , குரு என்றும் போற்றப்படுகின்ற சூரியனால், வாழ்வு பெறுகின்ற மக்களை, வளமோடு வாழச் செய்வது மட்டுமல்ல, தெளிந்த சிந்தையுடன் தெய்வத் தன்மை மிகுந்த