உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 65

‘அழிவு வராமல் காக்கிற கருவி என்கிறார்.

‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ (42 I)

அத்தகைய சிறந்த அறிவு, மெய்ப் பொருளைக் காண வைக்கும். நுண்பொருளில் நுழைய வைக்கும். சான்றோர்களுடன் சிறந்த தொடர்பினை ஏற்படுத்தும். செயற்கரியதை செய்ய வைக்கும். -

ஆகவே, வாழ்வின் பெருமையை வழிப்படுத்தி, நெறிப் படுத் தி, வயப்படுத் தி வழி நடத்திடும். குருவின் உறவுதான், ஒருவரை குணம் காத்து, குலம் காத்து, நலம் காத்து, புகழ் கொடுத்து, பூவுலகில் பெரும் பேறினைப் பொழியும் என்பதில் வள்ளுவர் உறுதியாகவே பேசுகிறார். அவரே ஒரு தெய்வீகக் குருதானே!

‘கற்றதனால் ஆய பயன் என் கொல் வளாலறிவன்

நற்றாள் தொழார் எனின்

இது இரண்டாவது குறள்.

பரிமேலழகர் உரை:

எல்லா நூல் களையும் கற்றவர்க்கு, அக் கல்வி அறிவானாய பயன் யாது? மெய் யுணர்வினை உடையானது, நல்ல தாள்களைத் தொழாராயின்.

பிறவிப் பிணிக்கு மருந்து நற்றாள். ஆகம அறிவிற் குப் பயன், அவனது தாளைத் தொழுது, பிறவியறுத்தல் என்பது.

பிறவிப் பிணி என்றதும், கடவுள் வாழ்த்தில் ஒரு

பாடல் என்றதும், இறைவனைத் தான் இது குறிக்கிறது என்று பரிமேலழகருக்குப் பின் வந்தவர்கள்