பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

எல்லோரும், சுருக்கமாகவும் உருக்கமாவும் அதைப் பின்பற்றியே உரை எழுதிப்போயினர்.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? இது திருக்குறளுக்கு விளக்கம் தந்தவர்களின் தெளிவுரை.

கற்றதனால் ஆய பயன் என்ற சொல்லுக்கு இங்கே நாம் புதிய பொருளைக் காண்கிறோம்.

கற்றவர் என்பவர் கல்வி, கேள்விகளில் சிறந்தவர் ஆவார்.

கற்றதனால் பெற்ற அறிவின் பயனாவது, சிறந்த பேரறிவுடையவரது நல்ல முயற் சிகளைக் கண்டு போற் றி, அவரது தாள்களைப் பணிந்து பின்பற்றி வாழ்தல் வேண்டும்.

வாலறிவன் என்பதற்கு, பேரறிவாளன் என்று அர்த்தம். நற்றாள் என்பது நல்ல+தாள் ஆகும். தாள் என்றால் முயற்சி என்று பொருள்.

நல் ல ஞானத்திற்காக, அதில் மேலும் மெய்ஞானம் பெற முயற்சி செய்கிற பேரறிவாளரை ஆணுகி, அவரின் ஆத்ம சீடராகி, அருந்தவக் கலைகளையும அதன் தொடர்பான 6 - Dr நிலைகளையும் அறிய முயற் சிப்பதே கற்றதன் பயனாகும்.

இறைவனின் தாள்களைத் தொழுது பணிவது தான், கற்றதன் பயன் என்றால், கல்லாதவர்கள் கடவுளைத் தொழமாட்டார்களா? கல்லாதவர்க்குக் கடவுள் பக்தி வராதா? இருக்காதா? என்பது போல