உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் வாழ்த்துக் கூறுகிறார் என்றும் பரிமேலழகர் விளக்கம் சொல்கிறார்.

வள்ளுவர் தான் எழுத முயன்ற இலக்கியத்தை, இனிதே முடிக்க கடவுளை வணங்கினார் என்றால், எந்தக் கடவுளை வணங்கினார்? அங்கே தான் அறிவாளர்களுக்குள் குழப்பம் ஆரம்பமாகிறது.

ஒவ்வொரு ஆசிரியரும், இதை தத்தம் சமய நூல் என்றும் வள்ளுவரைத் தத்தம் சமயத்தவர் என்றும் கூறுகிறார்கள் என்பது தான் குழப்பத்தின் உச்சக் கட்டமாக விளங்குகிறது.

கடவுள் வாழ்த்து என்பது தான் மனதார மதிக்கும் ஒருவரை பெருமையுடன் போற்றித் துதிக்கும் முறைக்கே கடவுள் வாழ்த்து என்று பெயர்.

வள்ளுவர் எந்தக் கடவுளை மதித்தார்? எந்தக் கடவுளை போற்றினார்? எந்தக் கடவுளை வணங்கினார்,

கடவுள் என்ற சொல்லுக்கு முதல் அர்த்தமே குரு என்பது தான். தெய்வம் என்பதும் ஒரு அர்த்தம்.

கடவுள் என்ற சொல் கட+உள் என்று பிரிகிறது.

உள்ளதையும், உள்ளத்தையும், இந்த உலகத்தையும் கடந்தவனைத்தான் கடவுள் என்ற சொல் விளக்இத் கூறுகிறது.

கடவுள் என்ற சொல்லுக்குரிய I Ga பொருட்களையும் பாருங்கள்.

உள்ளத்துறைவோன், எண் குணத் தோன், ஐம் புலத்தடங்கான், முக்குற்றம் கடிந்தோன், முழுதொருங்குணர்ந்தோன் என பல பொருட்கள்.

மேலே கூறிய சொற்களெல்லாம், கடவுள் என்று

அழைக்கப்படுகிற குருவையே குறித்துக் காட்டுகின்றன.

எங்கேயோ இருந்து கொண்டு, கண்ணுக்குத் தெரியாமல், காட்சி தராமல், பேசப்படுகின்ற பொருளாகவே விளங்குகிற