பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பேரறிவாளனின் நல்ல முயற்சி என்பது, இவ்வுலக வாழ்க்கையிலேயே, பேருயர் நிலையைப் பெறுவதுதான்.

மேலும் மேலும் பெருமுயற்சிகளில் முயன்று, செயற்கரிய செய்கின்ற பெரியோராக, உயர் நிலையை அடைந்து நிற் கின்ற குருவின் நல்ல திருவடிகளை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

அத்தகைய முயற்சி மிகுந்த திருவடிகளை, தொழுதல் என்று ஒரு சிறந்த சொல் லை இங்கே பெய்திருக்கிறார் வள்ளுவர்.

தொழுதல் என்ற சொல்லுக்கு காணல், காண்டல், கைகூப் பல் , தெண் டனிடல், பணிதல், பரவுதல் , பார்த்தல், பாராட்டுதல் , போற் றல் வந்தித்தல் , வணங் குதல் , வழிபடல் என்று பல பொருள்கள் உண்டு. -

கண்ணுக்குத் தெரியாத கடவுளை எண்ணத்தால் நினைத்து, இதயத் தில் ஒரு உருவை இதமாக ஏற்படுத்திக் கொண்டு தான் தொழ முடியும்.

ஆனால், அளவற்ற அன்பினால், முடிவில்லாத மெய்யுணர்வுடன் விளங்கும் குருவினை, நேரே காண முடிகிறது. (காணல்) நிறைவான மனதுடன் தரிசிக்க முடிகிறது. (காண்டல்) மெய் சிலிர்க்க கைக் கூப்பி களி பெற முடிகிறது (கை கூப்பல்) மனம் மகிழ, திருவடிகளைத் தொட்டு மார்பு நிலத்துற விழுந்து வணங்க முடிகிறது. (தண்டனிடுதல்)

அவர் முன்னே எளிமையாகி பணிய முடிகிறது (பணிதல்). அவரது ஆன்ற ஆன்மீக அருஞ் செயல்களைப் புகழ்ந்து சொல்ல முடிகிறது. (பரவல்).