பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அவ்வாறு, தெரிந்து தெளிந்த, திருவான குருவிடம் போய்ச் சேர்ந்தவர்கள், இந்த நிலமிசை நீடு வாழ் வார். அதாவது இந்த நில உலகில் , மக்கள் மனதில், நீண்டகாலம் வாழ்வார்கள். ஆமாம், நிலைத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இது எப்படி முடியும் என்று கேட்கலாம். எல்லாம் கடந்தவரை, எதிலும் நிறைந்தவரை, ஏற்றம் மிகுந்தவரை, வாழ் வை வழி நடத்துகின்ற வல்லவரைத் தான் நாம் குரு என்று கூறிக் கொண்டு வருகிறோம். -

குருவின் இயல்பு என்ன? அவர் எப்படி தன்னிடம் வந்து சேர்ந் தாரை, நல்ல மாணவன் என்றும், தொடர்ந்து வழிவருகிற துணிவும் திறமையும் உள்ளவன் என்றும் உணர்ந்து கொண்டு, தெளிவு மிக்க ஞானத்தை வழங்குகிறார்?

குருவானவர் எப்படி மாணவனுக் குப் போதிக்கிறார்? மந்திரம் சொல்லித்தந்தா? இல்லை. அந்த மாணவரை, அறநெறிக்கொள்கையில், ஆழமாக சிந்திக்க வைத்து-மனதில் ஒன்றிப் போய், வயப்பட்டு விடுகிற, மேன்மை நிலையை அளித்து விடுகிறார்.

இதைத் தான், தீட்சை என் பார்கள். பெ ட மொழியில் தீட்சை என்றால் உபதேசம். உபதேசம் என்றால் நன்மார்க்கத்திற்குறிய அறிவுரை, போதனை என்றும் கூறலாம்.

தன்னைப் பின்பற்றி, தன்னையே நம்பி வாழ்கிற மாணவர்களுக்கு, நன்மார்க்க போதனைகளை, குரு எப்படியெல்லாம் உபதேசிக்கிறார் என்று, வடமொழி நூலார் 9 வகையான உபதேச வழிகளைக் கூறுகின்றார்கள்.