உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 77

1. குருவானவர், தனது சீடனின் தலையிலோ அல்லது உடலிலோ தொட்டுக் கொண்டு 0 ) A6 ச% . ( A A வில் பரிச தீட்சை என்பர். குருவானவர், மாணவனைத் தொடு கிறபோதே, குருவின் உடலில் உள்ள சக்தி, ஆற்றல், ஞானம் எல்லாம், அதன் வழி மாணவரைப் போய்ச் சேருகிறது என்பது யோகியரின் கூற்று.

2. குருவானவர், தன்னை மறந்த நிலையில் தியானத்தில் இருந்த பிறகு, தன் கண்களைத் திறந்து மாணவனின் கண்களை அருளுடன் பார்க்கும் போது, உண்டாகும் உபதேசம். இதை திருஜ் தீட் சை என்பார்கள் . - -

3. குருவைக் கண்டதும், தனது ஐம்பொறிகளும் அடங்க, ஆன்ம உணர்வுகளால் மகிழ, அவருடன் உரையாடுவதாலோ அல்லது அவர் திருமேனி தீண்டுகிற போதோ, உண்டாகும் உணர்வும் தெளிவும். இதை சாம்பவி தீட்சை என்பர்.

4. குருவானவர், தனது கண்களால் , சகமாணவரின் கண்கள் மூலமாக, மெய் ஞானத்தை உணர்த்துவது. இதற்கு நயன தீட்சை என்று பெயர்.

5. குருவானவர், தனது சீடனுக்கு, தன் மனத்தால் நினைத்தபடியே ஞானத்தை உண்டாக்குவது. அதாவது, சீடரின் செயல்கள் எல்லாம் குருவினைக் கவர்ந்து விடுவதால், அந்த மாணவன் மெய்ஞானம் பெறத் தகுதி பெற்று விட் டான் என்று எண்ணுகிறபோது, இப்படி உபதேசம் செய்வது மரபு என்கின்றனர் இதற்கு மானச தீட்சை என்று பெயர்.

“.

6. மந்திரம் என்ற சொல்லை மன்+திரம் என்று