உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 79

கொடுத்தால், வள்ளுவர் காட்டிய வழியும், ஏட்டில் எழுதாத இலட்சிய முழக்கமும் எத்தகையது என்று. தெளிவாக்க முடியும் என்ற அவாவினால்தான்.

குருவானவர், தன்னுடன் சேர்ந்த மாணவர்கள் யாவருக்கும் , எப்படியெல் லாம் ஞானத் தை உபதேசிக்க முடியும் என்று கண்டோம்.

அவ்வாறு, குருவைச் சேர்ந்தவர் யாவரும், இந்த நில உலகத்தில், நிலை பெற்ற வாழ் வைப் பெற்று, நீண்டகாலம் துன்பமின்றி இருந்து, இன்பமுடன் வாழ்வார்கள்.

குருவைச் சேர்ந்தால் , அவருடன் சேர்ந்து விட் டால், மக்கள் உள்ளங்களில் இடம்பெற்று, நீண்டகாலம் இன்பமாக வாழ்ந்து விட முடியுமா? என்று நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கலாம்.

குருவின் திருவடியை சரணடைபவர்கள் செய்கிற காரியம் எப்படி இருக்க வேண்டும் என்று, வள்ளுவர் தன் குறள் மூலமாக சுட்டிக்காட்டிச் சென்றிருக்கிறார்.

‘உள்ளத்தால் பொப்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன் (294)

ஒருவன் தன் உள்ளத்தில் உண்மையை நிறைத்து, பொய் பேசாமல் ஒழுகி வந்தால், அதாவது, நிதமும் இந்த நிலையிலிருந்து விலகாது, ஒரே தன்மையில் வாழ்ந்து வந்தால் , அவன் உலகத் தில் வாழ் கின்ற அத்தனை பேர்களின் உள்ளங்களிலும் இருக்கிறான்.

பொய்மை என்பது உண்மைக்கு எதிர்மாறானது. வாய்மைக்கு முரண்பாடாகி பெருமையை அழிப்பது.