உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 8I

சித்தி மிகுந்த சித்தராக விளங்கிய தாயுமானவரே, தன் குருவாக இருந்து சித் தர்களுக்கு வழிகாட் ட வேண்டும் என்று வேண்டிப் பாடுகிறார் என்பது நம் மை நெகிழ வைக்கிறது. குருவின் மாண் அடி என்ற சொல்லையும் நாம் பார்ப்போம்.

குருவின் மாண்பு மிகு திருவடிகள் எப் படிப் பட்டது என்றால், மாட்சிமை மிக்க அடிகள் என்று பொருள். மாட்சிமை என்றால் அழகு, பெருமை, அமைதி, ஆற்றல் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.

இப்போது கூட, பெரியவர்களின் பாதம் பணிந்து வணங்குவது, நடைமுறையில் இருந்து வருகிறது. உயர்ந்த பண்புள்ள, புகழ் பெற்ற பெரியவர்களை சந்திக்க நேர்கிற போது, அவர்கள் முகத்தை முதலில் பார்க்காமல், பாதங்களைத் தான் முதலில் பார்த்து, அந்தத் திருவடிக்கு வணக்கம் செய்து எழுவது, பண்பாடாக இருக்கிறது.

அதற் குப் பிறகே, முழுவதுமாக (குரு வைத் ) தரிசிப்பது என்பது பண்பாடு. இதையே பாதாதிகேசம் என்றும் கூறுவார்கள். மாண்பு மிகு குருவின் திருவடிகளைத் தொழுது விட் டால் போதுமா என்றால், அல்ல. அவர் அடியொற்றி, நடந்து வாழ்கிற போதுதான், எல்லாப் புகழும் உண்டாகும்.

அடி என்பது இங்கே அடியொற்றி (Foot steps) நடத்தல் என்ற அர்த்தத் தைக் குறிக்கும். குருவின் திருவடியை தாமரை மலர்க்கு ஒப்பிடுவதும், அந்தத் திருவடித் தாமரைகட்கு வணக்கம் செய்வது, அறிவோரின் கடமை என்றும் அற நூல்கள் அழகாகக் குறித்துச் செல்கின்றன.