உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

இந்தக் குறளுக்கு எடுப்பான தெளிவுரையை இனி காண்போம். அன்றலர்ந்த மலர்போன்ற சிந்தையும் செழுமையும் , அழகும் கவர்ச்சியும், எழுச்சியும் களிப்பும் , கொண்ட குருவின் மாண்பு மிகு திருவடிகளைப் போற்றி அவரின் வாழ்வுடன் நடந்திட அவரைச் சேர்ந்தவர்கள், யாவரும் இந்த நிலவுலகில் புகழும் பெருமையும் , நிலைத்து நிற் கின்ற நீண்ட இன்ப வாழ்வினையும் பெற்று உய்வார்கள்.