உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 83

7. துன்பம் கலவாத இன்பம்!

‘'வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும் பை இல’’

இது திருவள்ளுவர் தந்த நான்காவது குறள்.

முதல் குறளில் அன்றாட வாழ்க்கையில் வளம் சேர்க்கவும் ; மக்கள் உடலில் , நலமும் பல மும் சேர்க்கவும் ; ஆர்வமுடன் வாழ்க்கை நெறிகளை ஒழுங்காகப் பின்பற்றுவதற்காகவும் உதவிகளைச் செய்து காக்கிற சூரியனை வணங்கிப் பாடுகிறார்.

வாழ்த் திப் பாடி, குரு வணக்கம் செய்து, தான் கூறப் போகும் அருமை மிகு அறம் பாடி, அற் புதக் கருத்துகளுக்கெல்லாம், பின்பற்றி ஒழுகப் போகிற மக்களுக்கு, எல்லா காலத்துக்கும் வாழ்வும் வளமும் சேர்க்க வேண்டும் என்ற, நம்பிக்கையுடன் அப்படிப் பாடுகிறார்.