பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் &9

எல்லா மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரு தவிர்க்க இயலாத தன்மையானதாகத் தான் இருக்கிறது. அவர்களது சிறப்பியல் புகள், அவர்கள் செய்கின்ற தொழில்களின் வேறுபாட்டால் அமைவதில்லை.

இந்த இரண்டு குறள்களையும் இங்கே குறிப்பிட்டுக் காட்டியது, வள்ளுவர் காலத்தில் இருந்த ஒரு காலக்கட்டத்தை சுட்டிக் காட்டத்தான்.

பிறப்பு எல்லா மக்களுக்கும் ஒன்றுதான். பிறப் பென்னும் அறியாமை, அதாவது ஒருவருக் கொருவரிடத் தே உண்டாகி விடுகின்ற இணக்க மின்மை எதற்கு? என்று வள்ளுவர் பாடியிருக்கிறார்.

மக்களிடத்திலே பிறப்பால் வேற்றுமை இருந்தது என்றால், அந்த வெறுக்கத்தகுந்த வேற்றுமை எப்படி வந்தது என்ற ஒரு குறிப்பை, இங்கே நாம் சிந்தித்தாக வேண்டும்.

பிறப்பு முறை எல்லாம் ஒன்றுதான். ஆனால், மக்கள் எப் படிப் பிறந்தார்கள் என்று, பிங் கல நிகண்டு, அக் கால சூழ் நிலையை, மிக சிறப்பாக விளக்கியிருப்பதைக் காண்போம்.

மக்கள் என்பவர்களை, மாந்தர், மானவர், மானிடர், மண்ணவர், மனிதர் என்றெல்லாம், பொதுவாக அழைப்பது வழக்கம்.

உலகத் தில் மக்களை உண்டாக்குகின்ற, பிறப்பிக்க வைக்கின்ற, வாய்ப்பு பெற்ற ஆண், பெண் இருவரும் எப்படிப் பட் டவர்கள் என்பதைப் பொறுத்தே, பிறக்கும் குழந்தைக்குப் பெருமையும், பிறப்புக்கு மரியாதையும் வழங்கப் படுகிறது.

உடல் உறவுக்காக கூடுகின்ற வாய்ப்பு பெறுகிற