பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 93

சிறுமைகளும், கொடுமைகளும் அந்நாளில் இருந்தது கண்டு தான், வள்ளுவர் பிறப்பு எல்லார்க்கும் ஒத்தது என்று பாடினார்.

குழந்தைகளை தாங்கள் அறியாமல் தானே பிறக்கின்றார்கள். பெற்றவர்கள் தவறால் கேவலப் படுகிற குழந்தைகளை, வளர்ந்த மக்களை வெறுக்க மாட் டார்கள் குருமார்கள் என்ற கருத்தில் தான், வேண்டாமை இலன் என்றார் வள்ளுவர்.

பிறப்புமுறை, எல்லோர்க்கும் ஒன்றுதான், என்று அன்று பாடிய வள்ளுவரின் சிந்தனைக் கு, இன்று வடிவமும் உயிர்ப்பும் கொடுத் திருக்கிற அறிவியலார்கள், பிறப்பு பற்றிக் கூறியிருக்கின்ற தன்மையையும் இங்கே ஒத்துப் பார்ப்போம்.

குழந்தைகள் (மனிதர்கள்) எல்லோரும் எப்படிப் பிறக்கிறார்கள்? -

ஆண் பெண் உடலுறவில் ஆண் அனுப்புகிற விந்தில் உள்ள 350 மில்லியன் உயிரணுக்களும், பல மணிநேரம் தாய் கர்ப்பப் பையினை நோக்கி ஒடுகின்றன. கர்ப்பப்பையின் அருகே செல்லக் கூடிய வலிமை பெற்ற உயிரணுக்கள் மொத்தத்தில் 100 முதல் 1000 என்பது கணக்கு. அதிலும் பல சோர்ந்து போய், பல திசைமாறிப் போய், பல பலமிழந்து போய், அழிந்து போகின்றன.

இறுதியாகப் போய் ச் சேருவது ஒரு 100 உயிரணுக்களே. அவற்றில் ஒன்றுதான், பெண்ணின் கருமுட்டையுடன் கலந்து விட, அது ஜீவனாகிறது என்பது விஞ்ஞானம்.

இப் படி பல மணிநேரம் ஒடிய உயிரணுக்களின்