உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 95

என்ற வெறுப் போ இல் லாமல் , எதையும் சமமாக எடுத்துக் கொள்கிற, பக் குவப் பட்ட பண்பாளராக விளங்கும் குருவின் அடியொற்றி, வாழ்ந்து வந்தால், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எவ் விதத் துன்பமும் ஏற்படாது என்கிறார் வள்ளுவர்.

வெயிலுக்கு நிழலாக, மழைக்குக் குடையாக, மன்பதைக் குப் பாதுகாப்பாக, மக்களுக்கு வழி காட் டியாக, துன்பம் கலவாத இன்ப வாழ் வுக்கு துணையாக இருக்கும் குருவை சேர்ந்து கொள்வதே இனிய வாழ்வு தரும் .