இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
8. பொருளும் புகழும்
‘இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு’
இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட் டு என்று பிரித்துப் பொருள் தருகிறார் பரிமேலழகர் பின்வருமாறு.
மயக்கத் தைப் பற்றி வரும் நல் வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து என்பது அவரின் உரை.
‘இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தர் மாட்டு,
இருள் சேர் இருவினையும் சேரா ’’
என்று பிரித்துப் பொருளைத் தருகிறார்கள் பலர்.
அறிவாற்றலில் சிறந்த மக்களின் ஒரு பெருந் தலைவரின் பொருள் பொருந்திய புகழை விரும்பி, அவரது அறிவுரையி படி வாழ் பவரிடத்து,