உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 97

அறியாமைால் உண்டாகும் பெருந்துன்பங்கள் எவையும் வந்து சேரா என்பது நாவலரின் விளக்கவுரையாகும்.

கடவுளின் உண்மையான புகழை விரும் பி நினைப் பவரை, அறியாமையால் வரும் நல் வினை தீவினை ஆகிய இரு வினைகளும் வந்து சேரமாட்டா என்று பேராசிரியர் அ. மாணிக்கம் தமது தெளிவுரையில் கூறுகிறார்.

இந்தக் குறளைப் படித்த போது, எனக் குத் தோன்றிய பொருள் வேறு விதமாக இருந்தது. அதை அப்படியே இங்கு தருகிறேன்.

‘இறைவன் மாட்டு பொருள் சேர் புகழ் புரிந்தார்

  • -

இருள் சேர் இரு வினையும் சேரா

என குறளைப் பிரித்திருக்கின்றேன்.

தலைமை ஏற்று நமக் குத் தலைவனாக விளங்குகிற குரு இடத்து, (இறை) சேர்ந்தபின், அவர் அறிவுரையின் படி, பொருளாக இருக்கும் உடலில், புகழாகிய மேன்மையை, (வலிமையை) உயர்த்திக் கொள்கிற போது, சொல்லும் செயலுமாகிய வினைகளால் , அவருக் குத் துன்பமும் , மயக்கமும் வந்து சேராது என்பது எனது பொழிப் புரையாக அமைகிறது.

இனி இதற்குரிய விளக்கத்தைக் காண்போம்.

கடவுள் வாழ்த்துப் பகுதியில் உள்ள 2, 3, 4வது குறள்களைப் பாருங்கள். வாலறிவன் நற் றாள் தொழ; மலர் மிசை ஏகினான் மானடி சேர; வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர