பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


யாவும் புலால் மறுப்புக் கொள்கையை, அருளின் அடிப்படையிலேயே கூறுகின்றன. பிற உயிர்கள் கொல்லப்படுவதாலேயே, புலாலுணவு தீது என்று சமயவாதிகள் கருதுகின்றனர். உண்மையான புலால் மறுப்புக் கொள்கை இன்னா செய்யாமை, கொல்லாமை, அருளுடைமை என்பவற்றினின்றும் வளர வேண்டும்.

மனிதனையே தின்னும் மனித இனம் (Cannibals) ஒரு சில நாடுகளில் வாழ்ந்த தாக வரலாறு கூறுகிறது. நல்ல வேளை! அவ்வினம் வரவர அருகி மறைந்துவிட்டது. இல்லாவிட்டால் மனித இனமே அழிந்திருக்கும். வங்காளத்தில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது மனித ஊனைக் கூடப் பசியின் காரணமாகப் பலர் உண்டதாகப் பங்கிம்சந்திரர் தம் 'ஆனந்த மடத்தில்' கூறுகிறார்.

காந்தியடிகள் 'மோட பனிபா' என்ற வணிக குலத்தைச் சார்ந்தவர். அக்குலத்தவர் புலால் உணவை அடியோடு வெறுப்பவர். ஆனால் தீய நண்பர்களின் கூட்டுறவால் அடிகள் புலால் உணவை மேற்கொண்டார். புலால் உண்பது பாவம் என்றே, அருளறத்திற்கு மாறுபட்ட செயல் என்றோ அவர் கருதவில்லை. 'ஆங்கிலேயர் புலால் உண்பவர். புலால் உண்பதால்தான் அவர்கள் வலிமை மிக்கவர்களாக விளங்குகின்றனர். நாமும் புலால் உண்டால்தான் வெள்ளையரை விரட்டி விட்டு, நாட்டிற்கு விடுதலை பெறமுடியும்' என்று நண்பர்கள் அறிவுரை வழங்கினர். அக்காரணத்