பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


அடிகள் புலால் மறுப்புக் கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டுக் கூற விரும்புகிறேன். அவர் தென்னாப் பிரிக்காவில் வாழ்ந்தபோது, அன்னை கஸ்தூரிபாய் நோய்வாய்ப்பட்டார். அவர் உடல் நலம் மிகவும் குன்றியிருந்தது. 'மாட்டிறைச்சிச் சாறு (Beef Soup) அளித்தாலன்றி நோயாளி பிழைக்க முடியாது' என்று மருத்துவர் கூறிவிட்டார்.

அடிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மருத்துவர் மிகவும் சினங்கொண்டார். 'நீர் படித்த முட்டாள்!' என்று அடிகளைத் திட்டினார்.

'கஸ்தூரிபாய் இணங்கினால் நீங்கள் கொடுக்கலாம். நான் அதற்குத் தடையாக இருக்கமாட்டேன்' என்று அடிகள் சொன்னார்.

ஆனால் அன்னையோ, 'நான் உங்கள் மடியில் தலையை வைத்துக் கொண்டு உயிர் விட்டாலும் விடுவேனே யன்றிப் புலால் அருந்தேன்' என்று கூறிவிட்டார். பின்னர், அடிகள் நீர் மருத்துவத்தின் மூலம் அவருடைய நோயைத் தாமே குணப்படுத்தினார். இந்நிகழ்ச்சியால் அவர்கள் புலால் மறுப்புக் கொள்கையில் எவ்வளவு பற்றுக்கொண்டிருந்தார்கள் என்பது விளங்கும்.