பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

அவர்கள் நூல்களைப் பயிலவேண்டுமென்று எண்ணினேன். அப்படியே, அவர்கள் மொழி பயில்வதில் மிக ஊக்கமாக ஒரு திங்கள் கழித்தேன். அம் மொழியைப் பயிலப் பயில அதன் அழகை உணரலானேன். அது உள்ளத்தைக் கவரும் ஓரினிய மொழி. தமிழ் மக்களுள் பண்டை நாளிலும் இந் நாளிலும் கூடப் பல அறிஞர் இருந்தனர்–இருக்கின்றனர் என்பது அம் மொழியின் அமைப்பாலும், பயிற்சியாலும் அறியக் கிடக்கிறது. இந்திய மக்கள் இமய முதல் குமரி வரை ஓரினமாக வாழ வேண்டுமானால், தமிழரல்லாத மற்ற மொழியினரும் தமிழுணரல் வேண்டும்.’

‘ஆங்கிலம் பயில்வதற்கு முன்னர்த் தமிழ் மொழி பயிலல் வேண்டுமென்று யான் பன்முறை பகர்ந்திருக்கிறேன். 1915 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்திலும் தமிழ் மொழியைச் சிறப்பாகக் கொள்ளுமாறு தமிழ் மக்களை வேண்டிக் கொண்டேன் ; தாய் மொழியில் பேசுமாறும், தாய் மொழி நூல்களைப் பயிலுமாறும் மக்களை வேண்டிக்கொண்டேன். திருக்குறளைப் பற்றிச் சில செம்மொழிகள் உங்கள் வரவேற்பில் மிளிர்கின்றன. இருபது ஆண்டுகட்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம், திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டுமென்று என்னுள்ளத்தெழுந்த அவாவேயாகும். தமிழ்மொழியில் புலமை பெறுதற்குரிய ஓய்வு எனக்கு ஆண்டவன்