பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


திட்டங்கள் (Constructive Programmes), சேமிப்பு (Savings), பொருளாதாரப் பங்கீடு (Distribution of Finance) ஆகிய பலவற்றையும் தம் மகத்தே கொண்டு விளங்குகின்றன. இக்குறட்பாக்கள் வகுத்துக் கூறும் கொள்கைகளைத் தம் குறிக்கோள்களாகக் கொண்டு, உலக அரசியல் முறைகள் நடைபெறுகின்றனவா என்பதைச் சுருக்கமாகக் காண்போம். உலகில் நடைபெறும் அரசு பல. அவை முடியரசு, சர்வாதிகார அரசு, குடியரசு என்பன.

முடியரசு : மக்களில் சிறந்த ஒருவன் முதன் முதலில் மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பான். அல்லது மக்களில் வலிமை மிகுந்த ஒருவன், பிறரைத் தன் ஆணைக்கு உட்படுத்தி அரச பீடத்தை அமைத்துக் கொண்டிருப்பான். மக்களின் நலன் பொருட்டே மன்னன் வாழவேண்டும் என்று எல்லோரும் எதிர் பார்த்தனர். முற்கால மன்னர்களும் அதையே தம் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனர். அதனாற்றான் 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்ற பொன் மொழியும் தோன்றியது.

காலம் செல்லச் செல்ல மன்னன் 'இறைவன்' ஆனான். தான் மன்னனாகப் பிறந்தது இறைவனின் ஆணையால் என்று எண்ணினான். தன்னை அரச பீடத்திலிருந்து நீக்கவோ, தன் செய்கைகளைத் திருத்தவோ அல்லது மேற்பார்வையிடவோ இறைவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று கருதினான். இக் கொள்கைக்கு, 'மன்னனின் தெய்விக உரிமை' (Divine Rights of the King)