பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


என்பது பெயர். இக் கொள்கையை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டு வாழ்ந்த கொடுங்கோலன், ஆங்கில நாட்டை ஆண்ட முதலாம் சார்லஸ் ஆவான். இறுதியில் இவன் பாராளுமன்றத்தின் முன் வெட்டிக் கொல்லப்பட்டான்.

மக்களின் உயிராக வாழவேண்டிய மன்னன், அவர்கள் உயிரைக் குடிக்கவும், அவனுடைய சொந்த விருப்பு வெறுப்புகட்காக நாட்டைப் போரில் ஈடுபடுத்தவும், மக்களின் பொருளை வரியால் சுரண்டி ஆடம்பரச் செலவு செய்யவும், நடுநிலைமை தவறி வேண்டாதாரை ஒறுக்கவும் தடைப்பட்டான். எனவே முடியரசு பயனற்றது என்று உலக மக்களால் கருதி ஒதுக்கப்படுகிறது.

சர்வாதிகார அரசு : மக்களின் செல்வாக்குப் பெற்ற ஒருவன் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு, பின் தன் விருப்பம் போல் நாட்டை ஆட்டிவைப் பது சர்வாதிகாரம். இட்லர், முசோலினி ஆகியோரின் ஆட்சி சர்வாதிகாரத்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். அந் நாட்டில் எண்ணுவதற்குக் கூட உரிமை கிடையாது. சர்வாதிகாரி எதை எண்ணுகிறானோ அதையே எல்லா மக்களும் எண்ணவேண்டும். இட்லரின் கொள்கைகளையே கவிஞர்கள் காவியமாகப் பாடினார்கள்; ஓவியர்களும், சிற்பிகளும், பாடகர்களும், நாடகக் கலை ஞர்களும், நூலாசிரியர்களும் அவனுடைய கருத்துக்களையே தம் கலைக்குக் கருப் பொருளாகக் கொண்டனர்.

உருசியா போன்ற பொது உடைமை நாடு (Totalitarian Countries)களில் மக்களாட்சி நடை