பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


பெற்றாலும் அந்நாடுகளின் அரசியல் முறையையும் சர்வாதிகாரம் என்றே சொல்லவேண்டும். உருசிய மக்கள் பொது உடைமைக் கொள்கையின் மூலம் அடைந்த வெற்றியைக் கண்டு உலகமே வியந்தது. சுரண்டப்பட்ட மக்கள் சமுதாயம் அனைத்தையுமே காப்பதற்குத் தோன்றிய அருமருந்து என்று இக் கொள்கையை உலகம் வரவேற்றது. இவ்வாட்சி முறை மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெரிதும் உயர்த்தியது உண்மைதான். இஃது ஈவு இரக்கமில்லாமல் கடுமையான முறைகளை இடைவிடாமல் கைக்கொண்டு முதலாளி வகுப்பை வேருடன் களைந்தது. கூட்டங் கூட்டமாகக் கொலைகள் செய்யப்பட்டன. துரோகத்திற்காக விசாரணைகள் நடத்தப்பட்டுப் பலர் கொல்லப்பட்டனர்; நாடு கடத்தப் பட்டனர். பொது உடைமைக் கட்சியே பாட்டாளிகளின் சர்வாதிகாரியாகத் தலைமை ஏற்று ஆட்சியை நடத்தியது. பொது மக்களைக் கருத்தில் கொண்டு பொருளியல் வாழ்க்கைக்குத் திட்டம் வகுத்து, மக்களின் நன்மைக்காகத் தொழில், வாணிகம், பண்ட மாற்று ஆகியவற்றை அரசாங்கம் தன் கையில் வைத்துக் கொண்டு ஒழுங்குபடுத்தி வந்தது. எனவே வறுமையில் வாடிய நாடுகள் உருசியப் புரட்சியில், நம்பிக்கையும், உருசிய நாட்டின்பால் நன் மதிப்பும் கொண்டது இயற்கையே.

ஆனால், இப்போது எதிர்ச்சுழல் துவங்கி விட்டது. உருசிய நாட்டின் கொள்கைகளைப் பெரிதும் பாராட்டிப் பேசிய லூயி பிஷர், மாக்ஸ் ஈஸ்ட்மன் ஆண்டிரி-கைட், பிரெடா உட்லே