பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. இறுவாய்

உலகில் பல பெரியோர்கள் தோன்றி, அறியாமை இருளில் தவித்துக் கொண்டிருந்த மக்களினத்தை நன்னெறியில் செலுத்தினார்கள், போர் வெறியும், பேராட்சி வெறி (Imperialism)யும் மலிந்திருக்கும் இந்நூற்றாண்டில், மக்களினத்தை நேர்வழிச் செலுத்தக் காந்தியடிகள் தோன்றினார். இந்திய மக்கள் காந்தியடிகளின் பெருமையை உணர்ந்ததை விட, மேலை நாட்டு மக்கள் சிறப்பாக உணர்ந்திருக்கிறார்கள். பிரெஞ்சுப் பேரறிவாளர் ரோமன் ரோலந்து, காந்தியடிகளின் வரலாற்றை எழுதியிருக்கிறார். அதில் அண்ணலைச் 'சமாதானத் தூதுவன்' (Apostle of Peace) என்று பாராட்டிப் பேசுகிறார். லூயி பிஷர் என்ற மேலை நாட்டறிஞர் அண்ணலின் கொள்கைகளை விளக்கி, ஆங்கிலத்தில் அரிய நூலொன்று எழுதியிருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டை அணுயுகம் (Atom Age) என்றோ , ராக்கெட் யுகம் (Rocket Age) என்றோ கூறலாம். ஒவ்வொரு வல்லரசும் தன் வலிமையையும் பெருமையையும் உலகில் நிலை நாட்டுவதற்காகப் புதுப்புது விஞ்ஞானக் கருவிகளைக் கண்டுபிடித்தவண்ண மிருக்கின்றது. அவர்கள் கண்டுபிடித்த அவ்வழிவுக் கருவிகளைக் கொண்டு ஒரே நாளில் உலகைச் சுடுகாடாக்கிவிடலாம். எந்த