பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

அன்புடைமை, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஈகை, ஒழுக்கமுடைமை, கண்ணோட் டம், கொல்லாமை, புலான் மறுத்தல், பொறையுடைமை, மடியின்மை, வாய்மை, வினைத்தூய்மை, வெகுளாமை, வெஃகாமை முதலியன அடிகளின் வாழ்க்கையிலும் படிந்திருக்கக் காணலாம். குறிப்பாகச் சொன்னால் மோகனதாஸ் கரம்சந்திர காந்தி, பிற்காலத்தில் ‘மகாத்மா’வாக மாறியதற்குத் திருக்குறளும் துணை புரிந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. எனவே வள்ளுவர் வழியில் காந்தியம் மலர்ந்தது என்பது பொருந்தும்.