பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

காட்டியும், உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’ என்று கூறி நகையாடினார். ஆனால் அண்ணல் காந்தியடிகள். அப்போது என்ன எண்ணினார் தெரியுமா? ஆசிரியரின் அறிவுரை தவறான தென்றும், பக்கத்து மாணவனைப் பார்த்து எழுதுவது குற்றம் என்றும் எண்ணினார். என்னே அடிகள் வாய்மையின்பால் கொண்ட உறுதி!

காந்தியடிகள் சட்டக் கல்வி பயில்வதற்காக இங்கிலாந்து புறப்பட்டபோது, அவருடைய அன்னை புத்லிபாய் பெரிதும் உளங்கவன்றார். மேலை நாடு சென்றால் புலால் உண்ண வேண்டி நேருமென்றும், மதுவருந்த நேருமென்றும் எண்ணினார். அச் செயல்கள் குலவொழுக்கத்திற்குப் புறம்பானவை. தம் மகனும் அத்தீய செயல்களில் ஈடுபட நேருமே என்பதுதான் அன்னையாரின் கவலை. அப்போது அடிகள், தாம் மதுவையும் புலாலையும் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை என்றும், பிற மகளிரை அன்னையாகக் கருதுவதாகவும் ஆணையிட்டுக் கூறினார். இங்கிலாந்தில் வாழ்ந்த அம்மூன்றாண்டுக் காலமும், அன்னைக்கு அளித்த வாக்குறுதிகளினின்றும் அவர் சிறிதும் தவறவில்லை. எவ்வளவோ இன்னல்களும், சோதனைகளும் அங்கு நேர்ந்தன. மரக்கறி உணவைத் தேடி அவர் பல கல் தொலை நடந்தார் ; பல நாள் பட்டினி கிடந்தார்; பல நண்பர் குழாத்திடை அவமானப்பட்டார்.

முட்டை புலால் உணவன்று என்று மேலை நாட்டு அறிஞர் பலர் வாதிட்டனர். இங்கிலாந்தில்