பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தாழ்த்திச் சென்றார். ஆனால் மாணவர்கள் அதற்குள் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பி விட்டனர். மறுநாள் காலை அடிகளைத் தலைமையாசிரியர் அழைத்தார். ‘ஏன் நேற்று மாலை யில் உடற் பயிற்சி வகுப்புக்கு வரவில்லை?’ என்று கேட்டார்.

‘கதிரவனைக் கருமேகம் மறைத்திருந்தபடியால் நேரம் தெரியவில்லை. காலம் தாழ்த்தி வகுப்பிற்கு வந்தேன்’ என்று காந்தியடிகள் விடையளித்தார். ஆனால் தலைமையாசிரியர் இதை நம்பவில்லை. அடிகள் பொய் புகல்வதாக எண்ணி இரண்டணா ஒறுப்புக் கட்டணம் (Fine) விதித்தார். தம் கூற்று உண்மை என்பதை எடுத்துக்காட்ட அடிகளுக்கு வழியில்லாமல் போயிற்று. தாம் ஒறுக்கப்பட்டதற்காகக்கூட அவர் வருந்தவில்லை. உண்மையை உளமாரக் கூறியும், ‘பொய்யன்’ என்ற தீப்பெயர் தம்மைச் சார்ந்ததே என்று எண்ணி எண்ணி உளம் நைந்தார்.

இளமையில் தம்பால் வாய்மை எவ்வாறு இடம் பெற்றது என்பதை அடிகள் தம் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். பள்ளியில் தாம் கற்றறிந்தவற்றைவிட, நாடகத்தின் மூலம் கற்றறிந்த உண்மைகளே தம் வாழ்வை இளமையில் செப்பனிட்டன என்று அடிகள் கூறுகிறார். அவர் குழந்தை பாயிருந்தபோது பார்த்த நாடகங்களில் ‘சிரவண பித்ருபக்தி நாடகம்’ என்பது ஒன்று. கண்ணிழந்த முதியோர்களான தன் பெற்றோர்களைச் சிரவணன் என்பவன் காவடியில் வைத்துத் தூக்கிக்கொண்டு