பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பாத்தில், நெசவாலைத் தொழிலாளர்கள் ஒருமுறை வேலை நிறுத்தம் செய்தனர். காந்தியடிகள் அவ்வேலை நிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தி வந்தார். அத்தொழிலாளர்களின் அவல நிலை அடிகளின் உள்ளத்தை வாட்டியது. பிறர் ஆடையில்லாமல் வருந்தத் தாம் மட்டும் இவ்வளவு ஆடைகளை அணிவது, அவருடைய மனச் சாட்சிக்கு ஏற்றதாகத் தெரியவில்லை.

‘இவ்வேழைப் பாட்டாளிகள் உடலை மூடிக் கொள்ளப் போதிய துணியில்லா திருக்கையில், நான் மட்டும் இவ்வளவு ஆடைகளை ஏன் சுமந்து திரிய வேண்டும்? என்னுடைய தலைப்பாகைத் துணியைக் கொண்டு பத்துக் குல்லாய்கள் தைக்கலாமே! அது பத்துப் பேர்களுடைய தலையை மூடப் போதுமே!’ என்று அடிகள் எண்ணினார்; தம் அரைவேட்டியின் நீளத்தையும் குறைத்துக்கொண்டார்; நீளமான கோட்டைக் கழற்றி எறிந்துவிட்டு, அரைக்கைச் சட்டையை அணியலானார். பாட்டாளிகளைப் போல் எளிய உடையை அணிந்த பிறகுதான் அவர் மனச்சாட்சி அமைதியுற்றது.

காந்தியடிகள், எளிய கதர்க் குல்லாய் அணியத் தொடங்கியபோது, மக்களுக்கு அது வியப்பை அளித்தது. காந்தியடிகள் வெள்ளைக் குல்லாய் அணிந்து கொண்டு தெருவில் சென்றபோது மக்கள் அதைச்சுட்டிக்காட்டிச் சிரித்து, ‘அதோ! காந்தி அணிந்து செல்லுகிறாரே அது என்ன?’ என்று கேட்பார்கள். சில குறும்புக்காரர்கள், ‘இது குல்லாயா அல்லது காசிப் பண்டாக்கள் அணியும்