பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

“ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார்—நன்றென
எப்பாலவரும் இயைபவே வள்ளுவனர்

முப்பால் மொழிந்த மொழி.”

‘சமயக் கணக்கர் மதிவழி கூறாது
ஆதலதில் கூறிப் பொருளிது வென்ற

உலகியல் வள்ளுவன் ... ... ...

‘எல்லாவற்றினின்றும் நல்லன எடுத்தோதுதல் வள்ளுவர் மதம்’ என்றார் பிறரும். இஃது நூலுக்கேயன்றிச் சமயத்திற்கும் பொருந்தும். ஏனென்றால் அறநூல்கள் பலவும் பெரும்பாலும் சமயச் சார்பு கொண்டே விளங்குகின்றன. வள்ளுவர் பல சமய நூல்களிலும் பயிற்சி கொண்டவர். அவ்வச் சமயங்களில் படிந்துள்ள உயர்கருத்துகளையெல்லாம் திரட்டித் தம் அறிவிற்கும் மனச்சாட்சிக்கும் ஏற்பத் தமிழர் பண்பாட்டினின்றும் வழுவாமல், இவ்வற நூலை எழுதினார் என்று கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை.

திருக்குறளின் முதலில் அமைந்துள்ள ‘கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரமே அவருடைய சமயப் பொதுமையை விளக்கும். அவ்வதிகாரத்தில் சிவனைப் பற்றியோ, திருமாலைப் பற்றியோ, அருகனைப் பற்றியோ, புத்தனைப் பற்றியோ கூறப்படவில்லை. ‘ஆதிபகவன்’, ‘வாலறிவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘வேண்டுதல் வேண்டாமையிலான்’, ‘இறைவன்’, ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’, ‘தனக்குவமை-