பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பற்றித் தம் உள்ளத்தில் கொண்டிருந்த ஐயப்பாடு களை யெல்லாம் அந்நண்பரிடம் கேட்டார்; மது வருந்துவதும், புலாலுண்பதும் கிருத்தவ மதக் கொள்கைகளா?’ என்று அந்நண்பரிடம் வினவினார்; இராசகோட்டையில் கிருத்தவப் பாதிரிமார் பிற சமயங்களை இழித்துப் பேசியதையெல்லாம் எடுத்தியம்பினார். அடிகளின் சொற்களைக் கேட்ட அந் நண்பர் மிகவும் வருந்தினார். ‘நான் புலால் உண்பதில்லை; மது அருந்துவதில்லை. கிருத்தவர் பலர் புலால் உண்பதும், மதுவருந்துவதும் உண்மையே. ஆனால் எங்கள் சமய நூலில் மதுவும் புலாலும் அருந்தும்படி கட்டளையிடப்படவில்லை. அருள் கூர்ந்து விவிலிய நூலைப் படியுங்கள்’ என்று அந்நண்பர் கூறினார். அவரே விவிலிய நூலின் படிவம் ஒன்றை அடிகளுக்கு வாங்கிக் கொடுத்தார்; விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் (New Testament) உள்ள ‘மலைச் சொற்பொழிவு’ (Sermons on the mount) அடிகளின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. எட்வின் ஆர்னால்டு எழுதிய ‘ஆசியசோதி’ (Light of Asia) என்ற நூலையும், கார்லைல் என்பார் எழுதிய ‘வீரரும் வீர வழிபாடும்’ என்ற நூலையும் காந்தியடிகள் படித்தார். அவ்விரண்டு நூல்களும் முறையே புத்தர் வரலாற்றையும், முகம்மது நபியின் வரலாற்றையும் கூறுகின்றன. அக்காலத்தில் சார்லஸ் பிராட்லா என்ற பேரறிஞர் இங்கிலாந்தில் வாழ்ந்தார். அவர் பெரிய நாத்திகர். நாத்திக சமயத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர் எழுதிய நூல்களை-