பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கிலுள்ள சாதாரண மக்களுக்கும் இது பொருந்தும். உலகிலுள்ள கோவில்களில் மரம், வெண்கலம், கல், பளிங்கு ஆகியவற்றால் அமைக்கப்பட்டிருக்கும் இறைவனின் சிலைகளையெல்லாம் பறித்துக் கொண்டு வந்து குவித்து, இறுதியில் அவைகளைக் கடலில் கொட்டிவிட வேண்டுமென்பது என் விருப்பம்” என்று கூறினர்.

குருதேவரின் பேச்சைக் கேட்ட எல்லோரும் வாயடைத்து நின்றனர். ஆனால் காந்தியடிகள் என்ன கூறினார் தெரியுமா ?

‘குருதேவரே! கோவிலில் இருக்கும் இறைவனின் சிலை முடவனின் கையிலுள்ள ஊன்றுகோல் போன்றது. அவனிடத்திலுள்ள ஊன்றுகோலைப் பறிப்பதற்கு முன் அவன் முடத்தன்மையை நீக்க வேண்டும். அதை ஒரேயடியாக நீக்க முடியாது. சிறிது சிறிதாகத்தான் நீக்க முடியும். முதலில் நாம் செய்யவேண்டிய வேலை அதுதான்’ என்று காந்தியடிகள் கூறினர்.

மக்கள்பால் படிந்துள்ள அறியாமையை அவர் முடத்தன்மைக்கு ஒப்பிடுகிறார். அவ்வறியாமை நீங்கினால் தான், உலகில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் இறைவனைக் காணும் உணர்வுபெற முடியும். முடவனுக்கு ஊன்றுகோல் உதவுவது போல் கோவிலில் உள்ள உருவச்சிலை இறைவனோடு மக்கள் சிறிதளவாவது தொடர்பு கொள்ள உதவுகிறது. அவ்வூன்றுகோலையும் பிடுங்கிக்