பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அமைத்துக்கொடுத்தவை, பல அரிய நூல்களாகும். ஆன்மிக அடிப்படையை அமைத்துக் கொடுத்த நூல்கள் கீதையும், விவிலியமும் ஆகும். அடிகளின் அரசியல் பொருளியல் சமூகவியல் ஆகிய அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தவைகள், அன்னாகிங்ஸ் போர்டு என்பார் எழுதிய ‘நேரிய வழி’ (The Perfect Way) என்ற நூலும் உருசியப் பேரறிஞரான தால்ஸ்தாய் எழுதிய ‘ஆண்டவன் அரசு உனக்குள்ளே’ என்ற நூலும், ஆங்கிலப் பேரறிஞரான இரஸ்கின் ‘எழுதிய கடைசி மனிதனின் நல்வாழ்வு’ (Unto The Last) என்ற நூலும் ஆகும். தால்ஸ்தாயை அடிகள் தம்முடைய குருநாதராகப் போற்றுவார். இரஸ்கினுடைய ‘கடைசி மனிதனின் நல்வாழ்வு’ தம்முடைய வாழ்வில் ஒரு திருப்பு மைய (Turning point) மாக அமைந்தது என்று கூறுகிறார். அந்நூலில் காணப்படும் அரிய உண்மைகள் மூன்று. அவையாவன :

1

. தனிப்பட்ட மனிதனின் நன்மை, பொது மக்களின் நன்மையில் அடங்கியுள்ளது.
2. வழக்கறிஞன் உழைப்பும், நாவிதனுடைய உழைப்பும் ஒரேபெறுமான முள்ளவையே. ஏனெனில் அனைவருக்கும் தங்கள் உழைப்பினால் சம்பாதிக்கும் உரிமை சமமாக உண்டு.
3. உடலை உழைத்து வாழும் வாழ்வே-அதாவது குடியானவன் அல்லது தொழிலாளியின் வாழ்வே-மேன்மையான வாழ்வாகும்.