பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

மேற்கூறிய கொள்கைகளே காந்தியடிகளின் வாழ்க்கையில் ஒளி வீசின. இக்கொள்கைகள் மனிதத் தன்மையின் எதிரொலிகள். காந்தியடிகளின் சமயத்திற்குச் சரியான பெயர் கொடுக்க வேண்டுமானல் ‘மனிதத் தன்மை’ என்று பெயர் கொடுக்கலாம். மேற்கூறிய கொள்கைகளை யெல்லாம் வள்ளுவப் பெருமான் பல இடங்களில் வற்புறுத்திச் சொல்கிறார். அக்குறட்பாக்கள் பின் வருமாறு :


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.

ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.