பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

யலிலுஞ் செலுத்தியது. இதனால் அரசியலுக்கும் சமயத்துக்கும் உள்ள தொடர்பு எனக்கு விளங்கியது. இரண்டிற்கும் தொடர்பில்லை என்று சொல்பவன், சமய நுட்பம் இன்னதென்று தெரியாதவன் என்று தயங்காமல் கூறுவேன்.’

‘சமயமின்றி அரசியலில்லை. சமயத்துக்கு அரசியலும் ஒரு துணை. சமயமற்ற அரசியல், கூற்றுவன் போன்றது.’

‘யான் அரசியல் வாதியா ? சமயவாதியா ? யான் அரசியல் நாடகம் சமயவாதி.’

‘சமயம் ஒரு முதல்; நாட்டுப்பற்று ஒரு சினை; சமயத்துக்கு நாட்டுப்பற்று கீழ்ப்பட்டது.”