பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

முடைய கைத்திறமையை அத்துண்டின்பால் காட்டுவதாகச் சொன்னார்.

‘அரசியல் வேலைகளுக்கும், வழக்கறிஞர் தொழிலுக்கும் உம்மை நம்பலாம். ஆனால் சலவைத் தொழிலுக்கு உம்மை எப்படி நம்பமுடியும் ? என்னுடைய மேல்துண்டைப் பாழ்செய்து விட்டால் என்ன செய்வேன்? என்று கூறினர் கோகலே.

காந்தியடிகள் மேலும் பிடிவாதம் பிடித்து, அத்துண்டை வாங்கிக் கொண்டார். சலவைத் தொழிலாளியைவிட நன்முறையில் அவ்வேலையைச் செய்திருப்பதாகக் கோகலே பாராட்டு வழங்கினர்.

தோட்டி வேலை அடிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்று. தென்னாப்பிரிக்காவில் போனிக்ஸ் பண்ணையிலும் தால்ஸ்தாய் பண்ணையிலும் அடிகள் வாழ்ந்தபோது, கக்கூசைச் சுத்தம் செய்யும் முறை இவருக்கும் உண்டு. 1944ஆம் ஆண்டு கல்கத்தாவில் இந்து முஸ்லிம் கலகம் மிகுதியாக இருந்தது. அக்குழப்பத்தை அடக்குவதற்காக அடிகள் அங்குச் சென்றார்; முஸ்லிம்கள் மிகுதியாக வாழும் பகுதியில் ‘ஹைதரி மாளிகை’ (Hydari Mansion) என்ற இடத்தில் தங்கியிருந்தார். ஒரு நாள் மாலை, அருகிலிருந்த ஒரு சிறிய சந்தின் வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அச்சந்தில் வாழ்ந்த மக்கள் கண்ட இடங்களில் மலங்கழித்துப் பாதையின் தூய்மையைக் கெடுத்திருந்தார்கள். அதைக் கண்ட அடிகள் அருகிலிருந்த நண்பர்களிடம் ஒரு கூடையும் மண்வெட்டியும் கொண்டு ‘’வருமாறு