பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

களில் பெண்களும் இருந்தனர். அவ்விருபத்தைந்து உறுப்பினர்களில் பதின்மூன்று பேர் தமிழர்கள். எல்லாரும் பொதுவான சமையலறையில் சாப்பிட்டு, ஒரே குடும்பம்போல் வாழ்க்கை நடத்தினர். அரிஜனக் குடும்பம் ஒன்றும் அவ்வாசிரமத்தில் இடம்பெற்றது.

ஒரு சிற்றுாரில் கூட்டமொன்று நடத்த ஏற்பாடாகி இருந்தது. காந்தியடிகள் அக்கூட்டத்தில் பேசவிருந்தார். காந்தியடிகளின் பேச்சைக் கேட்கவும், அவரைக் காணவும் மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். சேரியிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களும் வந்திருந்தனர். கூட்டத்தின் நிர்வாகிகள், அவர்களைக் கண்டதும், உங்களை இங்கு யார் அழைத்தது பள்ளருக்கும், பறையருக்கும் இங்கென்ன வேலை மரியாதையாக இவ்விடத்தை விட்டுச் சென்று விடுங்கள்’ என்று விரட்டினர். பாவம், அவர்கள் மீது நாற்புறமும் வசைமாரி பொழியப்பட்டது. அவ்வேழை மக்களுக்காகப் பரிந்து பேசுவோர் யாருமில்லை.

“பெரியோர்களே! எங்களுக்கும் இடந்தாருங்கள்.காந்தியடிகள் எங்களுக்கும் சொந்தம் தானே!” என்று வேண்டிக்கொண்டனர் அவ்வேழை மக்கள். கடைசியில் நிர்வாகிகள் ஓரளவு சமாதானமடைந்து அச்சேரி வாழ் மக்களுக்குத் தொலைவில் இடம் கொடுத்தனர்.

குறிப்பிட்ட நேரத்தில் காந்தியடிகள் கூட்டத்துக்கு வந்தார்; நேரே மேடைக்குப் போய்ப் பேசுவதற்காக நின்றார்; கூட்டம் முழுவதையும் ஒருமுறை