பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ளது. எனவே, உழவனின் இன்றியமையாமையையும் சிறப்பையும் புலப்படுத்தவே அடிகள் தாமும் உழவரானார். அடிகள் கடைப்பிடித்த இக்கொள்கைகளின் விளக்கங்களாகவே வள்ளுவரின் கீழ்க் கண்ட குறட்பாக்கள் திகழ்கின்றன :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்

கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.

‘காந்தியடிகள் தீண்டாமையைப் பற்றியும், சாதிக் கொடுமையைப் பற்றியும் கூறிய சில அறிவுரைகளைக் காண்போம்:

‘தீண்டாமை என்பது இந்து சமயத்தில் படிந்துள்ள ஒரு கறை.’

***

‘அரிஜனங்களைச் சாதி இந்துக்கள் நடத்தும் முறை சமயநெறிக்கும், அருள் நெறிக்கும் மாறுபட்டதாகும்.

***

‘தீண்டாமை இந்து சமயத்தின்பாற்பட்ட தென்று நான் நம்பவில்லை. அஃது அச்சமயத்தின் பாற்பட்ட தென்று சொல்லப்படின், அந்த இந்து சமயம் எனக்குரியதாகாது.

***

தீண்டாமை இந்து சமயத்தின் உயிர்நாடி என என் முன்னிலையில் உறுதிப்படுத்தப் படுமேல் இந்து சமயத்துக்கு நேர்மாறாகக் கிளர்ச்சி செய்ய நான் புறப்படுவேன்.