பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

அழைத்துப் பிடித்துத் தள்ளச் சொல்லட்டுமா?’ என்று கேட்டார்.

‘நல்லது ; போலீஸ்காரன் வரட்டும். நானாக இந்த வண்டியிலிருந்து நகரப் போவதில்லை’ என்றார் காந்தியடிகள். அதிகாரி கூறியது வெறும் மிரட்டலன்று. உண்மையாகவே போலீஸ்காரன் வந்தான். அவரைக் கையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினான். அவருடைய சாமான்களை எடுத்து வெளியே எறிந்தான். அப்போது குளிர் காலம். தென்னாப்பிரிக்காவில் உயரமான இடங்களில் குளிர் அதிகம். மாரிட்ஜ்பர்க் நகரம் உயரமான இடத்தில் அமைந்திருந்தது. பொறுக்க முடியாத குளிர். விடிய விடிய அக்கடும் குளிரில் அடிகள் நடுங்கிக்கொண்டு கிடந்தார். அப்போது தான் தம் உள்ளத்தில் அருளறம் முளைவிட்டுக் கிளம்பியது என்று கூறுகிறார் அடிகள். அதை அவர் வாயாலேயே கேட்போம்.

“வண்டி ஓடியது. குளிர் என்னைக் குடைந்தது. உயிர் நீங்குமோ என்று அஞ்சினேன். அருகிருந்த ஓர் அறைக்குள் புகுந்தேன். அங்கே ஒரு வெள்ளை உருவம் நின்றது. என் செய்வேன்! பிறந்த நாடு நோக்குவதா? அடிமைத்தளையை உடைக்க முயல்வதா? என்ற எண்ணம் என் உள்ளத்தில் ஊசலாடியது. அந்த நேரத்தில் எனது வாழ்வில் படிந்து கிடந்த அருளறம் செயலில் பரிணமித்தது.”

அருளறத்தைப் பற்றி அடிகள் ஓரிடத்தில் விளக்கும் போது, ‘ஒருவன் அருள் நெறியாளனாக இருக்க வேண்டுமானால், அவன் தனக்கு ஊறு-