பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

செய்தவன் பால் சீற்றங் கொள்ளாதிருக்கக் கடமைப் படல் வேண்டும். அவனுக்குத் தீங்கு நினைத் தல் கூடாது. நன்மையே நினைத்தல் வேண்டும்’ என்று கூறுகிறார். இவ்விளக்கத்திற்கு ஏற்றாற் போல், அடிகள் வாழ்வில் இரண்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

அந்த நாளில் டர்பனிலிருந்து பிரிடோரியாவுக்குப் போகும் வழி முழுவதும் புகைவண்டி வழி அன்று. வழியில் சார்லஸ்டவுன் என்னும் புகை வண்டி நிலையத்தில் இறங்கிக் குதிரை வண்டியில் ஜோகன்னஸ்பர்க் சென்று, அங்கே மறுபடியும் புகைவண்டி ஏறவேண்டும். சார்லஸ் டவுனில் காந்தியடிகள் இறங்கினார். அவரிடம் குதிரை வண்டிச் சீட்டும் இருந்தது. ஆனால் குதிரை வண்டியின் தலைவன் எளிதான பேர்வழியன்று. கறுப்பு மனிதனை வண்டியில் ஏற்றிக் கொள்ளாமலிருக்க அவனுக்கு ஏதேனும் ஒரு சாக்குத்தான் தேவையாக இருந்தது. ‘உம்முடையது நேற்றைய சீட்டு; இன்றைக்கு அது செல்லாது’ என்றான். காந்தியடிகள் ‘அது செல்லும்’ என்று வாதாடினார். கடைசியாக வண்டிக்காரன் தோல்வியடைந்து, காந்தியடிகளுக்குக் குதிரை வண்டியில் இடம் கொடுத்தான்.

அந்தக் குதிரை வண்டியில் பிரயாணிகள் உள்ளே உட்காருவது வழக்கம். வண்டிக்குள்ளிருந்த பிரயாணிகள் எல்லோரும் வெள்ளையர்கள். அவர்களுக்குச் சரி நிகராக ஒரு கூலியை (தென்னாப்பிரிக்க வெள்ளையர் இந்தியரைக் ‘கூலி’ என்று அழைப்பது வழக்கம்) வண்டிக்குள் உட்கார