பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

வைக்க வண்டியின் தலைவன் விரும்பவில்லை. தான் உள்ளே உட்கார்ந்து கொண்டு வண்டியோட்டிக்குப் பக்கத்து இடத்தில் காந்தியடிகளை உட்காரும்படி சொன்னான். இது அநீதி என்றும், அவமதிப்பு என்றும் அடிகளுக்குத் தெரிந்தே இருந்தது. ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று அவர் நினைத்தார்.

வண்டி புறப்பட்டுச்சென்றது; பிற்பகல் மூன்று மணிக்குப் பர்தேகோப் என்னுமிடத்தை அடைந்தது. வண்டியின் தலைவன் வெளியில் சற்றுக் காற்றாட உட்கார்ந்து சுருட்டுப்பிடிக்க விரும்பினான்.

வண்டியோட்டி கீழேயிருந்து கால் வைத்து அவனுடைய பெட்டிமேல் ஏறுவதற்குப் படி ஒன்று இருந்தது. வண்டியின் தலைவன், வண்டியோட்டியிடமிருந்து அழுக்குப் படிந்த சாக்குக் துணியொன்று வாங்கி அந்தப் படியில் விரித்தான். காந்தியடிகளைப் பார்த்து, “சாமி ![1] இதில் உட்கார்! வண்டியோட்டிக்குப் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்” என்றான். இந்த அநீதியைப் பொறுத்துக் கொள்ளக் காந்தியடிகளால் முடியவில்லை. உள்ளத்திற்குள் என்ன நேருமோ என்ற


  1. ‘சாமி’என்ற சொல், இந்தியர்களைக் குறிப்பிடுவதற்காகத் தென்னாப்பிரிக்க வெள்ளையரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. தென்னாப்பிரிக்காவில் கூலியாகக் குடி புகுந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்களே, அவர்களுடைய பெயர் இராமசாமி, கந்தசாமி, பெரியசாமி, பெருமாள் சாமி என்று பெரும்பாலும் இருந்ததால் இந்தியர்கள் எல்லோரையும் ‘சாமி’ என்ற பொதுப் பெயராலேயே வெள்ளையர் குறிப்பிட்டனர். “சாமி என்றால் ‘எசமான்’ என்று பொருள். நான் உம் எசமானா ?” என்று யாராவது துணிந்த இந்தியன், வெள்ளையரைக் கேட்டால் அவன் பிழைப்பது அரிது.