பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

விட்டால் உள்ளே வந்து உட்காரட்டும்!’ என்றார்கள். அவன் பிறகு அடிப்பதை நிறுத்தினான்; வண்டி யோட்டியைப் படியில் உட்காரவைத்து விட்டு, அவன் அமருமிடத்தில் உட்கார்ந்து கொண்டான்; அடிக்கடி காந்தியடிகளை விறைத்துப் பார்த்தும், விரலை ஆட்டிக்கொண்டே, “இரு இரு! ஸ்டாண்டர்ட்டன் போனதும் உனக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேன்” என்று உறுமுவதுமாயிருந்தான். பிரிடோரியாவுக்கு உயிரோடு போய்ச் சேருவோமா என்ற கவலை காந்தியடிகளுக்கு உண்டாகிவிட்டது. இருட்டிய பிறகு குதிரை வண்டி ஸ்டாண் டர்ட்டனை அடைந்தது. வண்டி நின்ற இடத்தில் சில இந்தியர்கள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் அடிகள் உள்ளத்தில் ஆறுதல் ஏற்பட்டது. அந்த ஊரிலிருந்த குதிரை வண்டிக் கம்பெனியின் முதலாளிக்குக் காந்தியடிகள் வழியில் நடந்த விவரமெல்லாம் தெரிவித்துக் கடிதம் எழுதினார்.

‘இந்த ஊரிலிருந்து வேறு பெரிய வண்டி போகிறது. வண்டித் தலைவனும் மாற்றப்படுகிறான். பிற பிரயாணிகளோடு உமக்கு வண்டிக்குள்ளேயே இடம் தரப்படும்’ என்று அம்முதலாளி பணிவோடு எழுதியிருந்தான். மேற்கூறிய குதிரை வண்டி நிகழ்ச்சியைப் பற்றிக் காந்தியடிகள் தமது வரலாற்றில் விவரித்து விட்டு முடிவுரையாகப் பின்வருமாறு எழுதியிருக்கிறார் :

‘என்னை அடித்த குதிரைவண்டித்தலைவன்மீது அதற்குமேல் வேறு நடவடிக்கை எதுவும் எடுக்க