பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

அடிகள் அப்போது தென்னாப்பிரிக்காவில் நன்கு விளம்பரமாகி யிருந்தார். அவருக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது. அவர் நினைத்திருந்தால் அக்காவற்காரனுக்குத் தக்க தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க முடியும், ஆனால் அவர் அதை விரும்பவில்லை. 'பகைமையை அன்பால் வெல்ல வேண்டும்; இன்னா செய்தார்க்கும் இனியவே செய்ய வேண்டும்' என்ற கொள்கையே அவரைப் பழிவாங்கும் எண்ணத்திலிருந்து காத்தது என்று சொல்லலாம். அடிகளின் கொள்கையையும் வள்ளுவரின் கீழ்க்கண்ட குறட்பாக்களையும் ஒப்பிட்டுக் காண்போமாக:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறை [யுடைமை
போற்றி யொழுகப் படும்.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.

இனி அடிகள் கொடிய விலங்குகளிடத்தும், தாவரங்களிடத்தும் கூட அருள் நெறியாளராக