பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


புடன் சுருட்டி, அடிகள் உடலினின்றும் அப்புறப்படுத்திவிட்டார். அடுத்த நாள், செய்தித்தாள்களில் இந் நிகழ்ச்சி பலவாறாக வெளியிடப்பட்டது. 'ஒரு நாகப்பாம்பு காந்தியடிகளின் தோள் மேல் ஏறி, அவருடைய தலைக்கு மேல் தன்னுடைய படத்தை விரித்துக் குடை பிடித்தது. அவருக்கு நற்பேறு காத்துக் கொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் பேரரசராக முடிசூட்டிக் கொண்டு அரசாட்சி செய்யும் காலம் நெருங்கிவிட்டது' என்றெல்லாம் எழுதினார்கள்.

இச்செய்தியைச் செய்தித் தாளில் படித்த திருவாளர் காகா காலேல்கர், அருகிலிருந்த அடிகளைப் பார்த்து, 'பாம்பு உங்கள் தோளின் மேல் ஏறியபோது, நீங்கள் என்ன நினைத்தீர்கள்?' என்று கேட்டார்.

அதற்குக் காந்தியடிகள், 'பாம்பு என் தோளை அடைந்ததும் அச்சத்தால் ஒரு வினாடி திடுக்கிட்டேன். ஆனால் அவ்வச்சமும் ஒரு வினாடி தான் இருந்தது. பிறகு அமைதியடைந்து விட்டேன். பாம்பு என்னைக் கடித்துவிட்டால், அதை யாரும் அடித்துக் கொல்லக்கூடாது என்று அருகிலிருந்தவர்களுக்குக் கூறவேண்டும் என்று எண்ணினேன். ஏனென்றால் பாம்பைக் கண்டவுடன், ஒரு மனிதனின் உள்ளத்தில் தோன்றும் முதல் எண்ணம் அதை அடித்துக் கொல்லவேண்டும் என்பதுதான். ஆனால் என்னைக் கடித்த பாம்பு, அச்சமும் ஆபத்துமின்றி அமைதியாகச் செல்ல வேண்டும் என்பது என் அவா' என்று சொன்னார்.