பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


பத்தைத் தன்னுடைய துன்பமாகக் கருதவேண்டும் என்றும் கூறுகின்றார்.

"அறிவினன் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தக்கோய்போல் போற்றாக் கடை"

இக்குறளுக்கு மாபெரும் எடுத்துக்காட்டாக அடிகள் வாழ்ந்து வந்தபோது ஒரு தொழு நோயாளன் (குட்டரோகி) அவர் வீட்டுக்குப் பிச்சைக்காக வந்தான். நோய்களிலெல்லாம் கொடியது தொழு நோய், ஈயருந்த அழுகு தசை! எறும்பு மொய்க்க இற்றொழுகு புன்னீர்! அருகிற் சென்றால் அருவருப்பையூட்டும் தீ நாற்றம்! இக்கோலத்தோடு வரும் ஒருவனை ஏற்று உபசரிக்க யாருக்காவது உள்ளம் இடம் தருமா? ஆனால், அடிகள் அவன் நோயைத் தம் நோயாகக் கருதி உள்ளம் நைந்தார். அவன் ஓர் ஏழை இந்தியன். சொந்த நாட்டில் வாழ வழியற்றுத் தோட்டக் கூலியாக ஆப்பிரிக்க நாட்டுக்கு வந்தவன். வந்த இடத்தில் இப் பாழும் நோய் அவனைப் பற்றிக்கொண்டது. அதனால் அவன் வேலையும் போயிற்று. பசியின் கொடுமையால் பிச்சைக்காரனானான். அவனுடைய கதையைக் கேட்ட அடிகள் கண்ணீர் சொரிந்தார்; ஒருவேளை பிச்சையிடுவதால் அவன் துயரம் தீர்ந்துவிடாது என்பதை உணர்ந்தார்; அவனைத் தம் இல்லத்திலேயே வைத்துக்கொண்டு சிலநாள் மருத்துவம் புரிந்தார். புண்களெல்லாம் ஆறின.

தொழுநோய் கொண்டவனை எவ்வளவு நாள் வீட்டில் வைத்துப் பாதுகாக்க முடியும்? பிறருக்கும்