பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


இரண்டாம் முறையாகக் காந்தியடிகள் தென்னாப்பிரிக்கா சென்றார். அவர் ஏறிச் சென்ற 'கோர்லாண்டு' என்ற கப்பல் டர்பன் துறைமுகத்தை அடைந்தது. தென்னாப்பிரிக்க வெள்ளையரிடமிருந்து அடிகளுக்குப் பல அச்சுறுத்தல் கடிதங்கள் வந்தன. 'காந்தி! திரும்பிப் போய்விடு. திரும்பிப்போக இணங்கினால் பயணச்செலவைக் கொடுத்துவிடுகிறோம். திரும்பிப்போக இணங்காவிட்டால் கடலிலே தள்ளிச் சாகடித்து விடுவோம்!' என்பன போன்ற அச்சுறுத்தும் செய்திகள் அக்கடிதங்களில் காணப்பட்டன. டர்பனிலிருந்த நண்பர்கள், 'இங்குள்ள வெள்ளையர்கள் உங்கள் பால் மிகுந்த சினங் கொண்டிருக்கிறார்கள். இது உங்களுக்குத் தெரிந்ததே. ஆகையால் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பகலில் கப்பலிலிருந்து இறங்க வேண்டாம். நன்றாக இருட்டிய பிறகு இறங்குங்கள்' என்று அடிகளுக்குச் செய்தி அனுப்பினார்கள்.

சிறிது நேரம் சென்றதும், திருவாளர் இலாப்டன் என்ற வெள்ளைக்கார வழக்கறிஞர் ஒருவர் வந்தார். அவர் அடிகளின் நெருங்கிய நண்பர். இருட்டில் திருடனைப்போல் மறைந்து செல்லும் யோசனை தமக்குப் பிடிக்கவில்லை என்று அவர் அடிகளிடம் சொன்னார். காந்தியடிகளின் எண்ணமும் அதுதான். உடனே அன்னை கஸ்தூரிபாயையும், குழந்தைகளையும் ஒரு வண்டியிலேற்றி ரஸ்டம்ஜியின் வீட்டுக்கு முன்னதாகவே அனுப்பிவிட்டார். கப்பல் தலைவரிடம் விடை பெற்றுக்கொண்டு காந்தியடிகள் தம் நண்பருடன் கப்பலிலிருந்து இறங்கி, இரண்டு கல்