பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

நான்கு புறத்திலும் அவரை நெருக்கியது. அவர் மூச்சுவிடவும் முடியாத நிலைமை ஏற்பட்டது.

அச்சமயத்தில் அவ்வூர் போலீஸ் அதிகாரி திருவாளர் அலெக்சாண்டரின் மனைவி, அப்பக்கமாக வந்தார். மக்களின் வெறிச் செயலைக் கண்ட அவர், அடிகள் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தார்; தம் குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு நின்றார். அதனால் கூட்டத்தினர் காந்தியடிகளை நெருங்கவோ அல்லது அடிக்கவோ முடியாமல் போயிற்று. திருமதி அலெக்சாண்டர் மீது அடிபடாமல் காந்தியடிகளை அடிக்க முடியவில்லை.

இதற்குள்ளாகத் திருவாளர் அலெக்சாண்டருக்குச் செய்தி எட்டியது. உடனே சில போலீஸ்காரர்களுடன் அவ்விடத்திற்கு வந்தார்; அடிகளை அக்கூட்டத்தினிடமிருந்து விடுவித்து ரஸ்டம்ஜியின் வீட்டில் கொண்டு சேர்த்தார். அங்கும் வெள்ளையர்கள் பெரும் திரளாகக் கூடிவிட்டனர். ரஸ்டம்ஜியின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு, 'காந்தியை வெளியே அனுப்பு' என்று கூச்சலிட்டனர். கூட்டத்தினரின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த அலெக்சாண்டர், அதற்காக ஒரு தந்திரம் செய்தார்.

'புளிப்பு இலக்தை மரத்தின் மீது

பொல்லாத காக்தியைத் தூக்கிலிடு'-

என்ற ஒரு பாட்டைத் தாமே இட்டுக் கட்டிப் பாடினார். கூட்டத்தினரும் அவருடன் சேர்ந்து உற்சாகமாகப் பாடினர். அதற்குள்ளாக அடிகள்