பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வள்ளுவர் வாழ்த்து

உள்ளத்தில் மகிழ்வும்,

இல்லத்தில் பொலிவும்

மக்களே, நாள்தோறும் விருந்தைப்பெறும் வீடு தனி அழகைப் பெறுமே விருந்தினரோடு உண்ணும். உணவு தனிச் சுவை தருமே! விருந்திடும் இல்லறத்தார். உள்ளம் அன்பு பொங்க மகிழுமே இவற்ருல் விருந்து பெற்ற இல்லம் நிறைவோடு விளங்கும். தன் இல்லத் திற்கு வரும் விருந்தினரை நாள்தோறும் ஏற்றுப் போற்று: கின்றவனது வாழ்க்கை, துன்பம் பெற்றுக் கெட்டொழிவ. தில்லை. . .

வாழ்க்கை கெட்டொழியாததற்குக் காரணம் விருந் , திடுபவனுடைய இல்லறம் பொலிவு பெறுவதேயாகும். விருந்தைப் போற்றுபவன் என்ருல் போற்றுபவளேயும் இணைத்தேதான் குறிக்கின்றேன். விருந்தைப் போற்று பவன் அன்பு உள்ளம் கொண்டு அமைவான். உள்ளம் மகிழ்ந்து விருந்தினரைப் போற்றுவான். உள்ள மகிழ்ச்சி யால் முகம் மலர்ந்து விளங்கும். அக மகிழ்ச்சியும், முக மலர்ச்சியும் அமைந்தவன் வீட்டில் ஒரு பொலிவு நிறை யும். இல்லத்தில் செவ்வையான வளமும் நிலைக்கும். இந்தச் செவ்வையான வளத்தை நம் முன்னவர் ஒரு பெண் உருவாக்கிச் செய்யவள் என்ற பெயரால் குறித் தனர். ஆகையால் *முகம் மலர்ந்து தனக்குக் கிடைத்த கல்ல விருந்தினரை ஏற்றுப் போற்றுகின்றவனது இல்லத்

કે வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை,

பருவங்து பாழ்படுதல் இன்று.

  • அகனமர்ந்து செய்யாள் உறையும், முகனமர்ந்து

கல்விருந் தோம்புவான் இல்.