பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 103

கிடைக்கும் விருந்தினரும் நல்ல விருந்தினராக அமைய

வேண்டும்.'

கண்ணன் : கண்ணம்மா, தந்தை நல்ல விருந் தினர் என்று குறித்ததைக் கவனித்தாயா? விருந்துச் சோறு கிடைக்கிறது என்று நாள்தோறும் வருவோரெல் லாம் நல்ல விருந்தினர் ஆவாரோ ? உண்டுவிட்டு உண்ட வீட்டில் உளவும் அறிந்து செல்வர். காலம் வாய்க்கும்போது உளவு கொண்டு களவும் செய்வர். அவரால் இல்லறம் செய்யவளையா பெறும் ?

மகனே, அத்தகையவர்கள் விருந்தினரே அல்லர். விருந்து என்பது புதிதாய் வருபவரைக் குறிப்பதாகும். நல்ல உள்ளம் படைத்தவர் ; அன்பும் அறிவும் சான்ற வர் ; விருந்திடுவோனுடைய உள்ளத்தையும் குடும்ப வளத்தையும் அறிபவர் அந்தக் குடும்பம் வளத்தோடு வாழவேண்டும் என்னும் ஆர்வம் கொள்பவர் ஆகிய இத்தகையோரே நல்ல விருந்தினர். இத்தகையவர் நாளைக்கு எத்துணை பேர் வந்தாலென்ன ? அவர்கள் எதிர்பாராது பலராக வர நேர்வதே ஒரு வாய்ப்பு. தம் இல்லத்தில் பல விருந்தினரை ஏற்றுப் போற்றி உண்ண வைத்து அந்தக் காட்சியை முன் நின்று காண்பதே ஒரு பேறு. அதன்பின் எஞ்சிய உணவு சிறிதேயானலும் அஃதும் தாம் பெற்ற உள்ள நிறைவால் நிறைவாகச் சுவைக்கும்.

அத்தகைய நல்ல விருந்தினர் தாம் விருந்துண்ட இவ்லத்தவர் அடையும் சிறு கேட்டையும் கண்டு கொண்டு இருக்கமாட்டார் ; தோள் கொடுத்துத் தாங்கு வர். விருந்திட்டவர் கேட்டை அடையும் காலம் வரை காத்துக்கொண்டு இருக்கமாட்டார். அவர் அறியாமலே