பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 107

பார்த்தால் வாடும் மலர்

நன்று மக்காள் மகிழ்வோடு வரவேற்பது இன்றி பமையாதது. விருந்தினருக்கு விருந்தின் சுவையை விட மகிழ்ச்சியான வரவேற்புதான் மகிழ்வைத் தரும். நீங்கள் அனிச்ச மலரைப்பற்றி அறிந்தவர்கள். அந்த மலர் மிக மென்மை உடையது. அதைவிட மென்மை உள்ளம் வாய்ந்தவர் விருந்தினர். 'அனிச்ச மலர் மோந்த அளவிலே வாடிவிடுவது. அதுபோல், முகத்தில் மலர்ச்சியின்றி வேறுபட்டு நோக்கிய அளவிலே விருந்தி னர் உள்ளம் வதங்கி விடுவர்.

விருந்தினர் அந்த அளவு மென்மையும், தன்மான மும் வாய்ந்த உள் ளத்தை உடையவர். ஆகவே, அகத் தோடு முகம் மலர்ந்து நீங்கள் விருந்தைப் போற்றி வாழ்க !

" தந்தையே, அவ்வாறே போற்றுவோம் என்று உறுதி கூறுகின்றேன். இன்றைய நண்பகலில் எங்கள் இல்லத்தில் நாங்கள் இல்லாததால் விருந்தைப் பெறும் வாய்ப்பை இழந்தோமோ என்னவோ ! இரவிலேனும் அந்த வா ய் ப் ைப ப் பெறவேண்டும்' - என்ருள் கண்ணம்மா.

செல்க மக்காள் -என்ருர் தந்தை. கண்ணன் : நாளை வள்ளுவனர் : இனிய சொல் சொல்வேன். கண்ணம்மா : நாங்களும் இனிமை கொள்வோம். மூவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

SAASASASS S:32:Sసిసి ۔م۔ بہ۔-ہم-- ~--

  • மோப்பக் குழையும் அனிச்சம் , முகம்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.